கொரோனா குறைய தொடங்கியதன் காரணமாக வழக்கமான செயல்களை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று 3-வது அலை இறுதி கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலானவர்களில் 74 சதவீதத்தினர் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 39 சதவீதத்தினர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் ஏற்படும் இழப்பைத் தடுப்பதில் தடுப்பூசிகள் 99% பயனுள்ளதாக இருக்கிறது. இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொள்ளும் போது அது மரணத்துக்கு எதிராக 99.3 சதவீதம் பாதுகாப்பானதாகிறது. சமீபத்திய எழுச்சியை கட்டுப்படுத்த சுகாதார பாதுகாப்பு முன் களப் பணியாளர்களின் உழைப்பு தடுப்பூசிகள்தான். தற்போது பள்ளிகள், கல்லூரிகள், ஓய்வு விடுதிகள், பொருளாதார நடவடிக்கைகளை திறக்கலாம்.
வழக்கமான செயல்பாடுகளை தொடங்கலாம். ஆனால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது நாட்டின் 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. மேலும் 24 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதமாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.