காய்கறி வியாபாரி கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் காட்டாத்துறை பருத்திக்கோட்டவிளை பகுதியில் காய்கறி வியாபாரியான கிறிஸ்டோபர்(47) என்பவர் வசித்து வந்தார். இவர் மனைவி ராஜினி(41). கிறிஸ்டோபர் நிறைய பேரிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டார்.
இதனால் மனமுடைந்த கிறிஸ்டோபர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து தக்கலை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.