ஷிவானி நாராயணன் ”அரபிக் குத்து” பாடலுக்கு அசத்தலாக நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT யில் ஒளிபரப்பாகி வருகிறது.
https://www.instagram.com/p/Caq2QhdKnaW/
இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி நாராயணன். இவர் இதற்கு முன்னர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பிக்பாசில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது பீஸ்ட் படத்தின் பாடலான ”அரபிக் குத்து” பாடலுக்கு அசத்தலாக நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் அதிகம் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.