Categories
சினிமா தமிழ் சினிமா

பாலா – சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படம்….. சூர்யா இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா….?

பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Gun-toting police security for actor surya house | நடிகர் சூர்யா வீட்டிற்கு  துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு! – News18 Tamil

இதனையடுத்து, இவர் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் சூர்யா காது கேட்காத மற்றும் வாய் பேச இயலாத நபராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |