வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனையடுத்து தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து வடக்கு கடலோர பகுதிகளில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூரில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது எனவும். ஏற்கனவே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பும்படியாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.