Categories
உலக செய்திகள்

உக்ரைனின் நிலை மேலும் மோசமடையும்…. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பிரான்ஸ் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டின் நிலை மேலும் மோசமடைய வாய்ப்பிருப்பதாக விளாடிமிர் புடினுடன் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 9-ஆம் நாளாக கடும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உக்ரைனும், அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்பிலும் உயிர் பலிகள் அதிகம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரை நிறுத்துவதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் மேற்கொண்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் தொலைபேசியில் நேற்று பேசியிருக்கிறார். அப்போது, உக்ரைன் நாட்டில் மேற்கொள்ளும் தாக்குதலை கைவிடுமாறு மேக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்  அதிபர் இம்மானுவேல், உக்ரைன் நாட்டின் நிலை மேலும் மோசமடையலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்த கருத்துக்களும் உறுதியளிக்கக்கூடிய வகையில் இல்லை என்று மேக்ரோன் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |