Categories
மாநில செய்திகள்

#BREAKING: சின்னசேலம் பேரூராட்சியில் தேர்தல் ஒத்திவைப்பு…. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 04/03/2022 இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியில் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவும் அபாயம் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி மறைமுக தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |