பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குண்டடம் பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செட்டிபாளையம் பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த காவல் துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கனகசபாபதி, தங்கராஜ், கோபால், சாமிநாதன், ஜெகநாதன், ஈஸ்வரன், ஜெகதீஸ்வரன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த ரொக்கம் ரூ.1200-யும் பறிமுதல் செய்தனர்.