தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கடந்த 2ஆம் தேதி வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தலானது, இன்று நடைபெற்று முடிந்துள்ளது. அதில் திமுக வேட்பாளர்களே பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று வருகின்றனர்.
இதில் வார்டு உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர் பதவிகளை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் திமுக சார்பில் சென்னை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியா ராஜனை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், அவர் சென்னை மேயராக தேர்வாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி சின்னம் பொறித்த பிரத்தியேக கொடி ஏற்றப்பட்டது.