Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை தேடி சென்ற பெண் …. வாலிபரின் வெறிச்செயல் …. போலீஸ் நடவடிக்கை ….!!

பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில்  தமிழ்நாடு உணவு சேமிப்பு கிடங்கு அலுவலகத்தில்  மேலாளராக சீனிவாசன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அலுவலக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க திருமணமான  22 வயதுடைய  இளம் பெண் வந்துள்ளார். இதனை பார்த்த  சீனிவாசன் அந்த பெண்ணை பணி குறித்து பேசுவதற்காக மேலாளர் அறைக்கு வருமாறு கூறியுள்ளார். இதனை கேட்ட அந்த பெண் சீனிவாசன் இருக்கும் அறைக்கு சென்றுள்ளார்.

அப்போது சீனிவாசன் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் இது  பற்றி வெளியே கூறினால் விண்ணப்பத்தை நிராகரித்து விடுவேன் என கூறி  மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின்  கணவர் இரும்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த சீனிவாசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |