பொதுமக்களுக்கு ஓட்டு போடுவதற்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கபட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓட்டு போடுவதற்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் கிசாக்ஸ் என்ற எந்திரம் மூலம் ஓட்டு போடுவதற்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மோகன் தொடங்கிவைத்தார்.இதையடுத்து அவர் கூறியதாவது வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பொதுமக்கள் http://www.nvsp.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் விண்ணப்பித்த பின்னர் தாங்கள் பதிவு செய்த கைப்பேசிக்கு ஒரு மெசேஜ் வரும். அந்த மெசேஜ் வந்தபிறகு மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.