Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற மாசித்திருவிழா…. பக்தர்கள் தரிசனம்….!!

வீரமுத்தி அம்மன் திருக்கோவில் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைபட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற வீரமுத்தி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 22-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா  தொடங்கியது. இதில்  1-ஆம் தேதி முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எதுத்தல், அக்கினி சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனையடுத்து 2-ஆம் தேதி  பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இந்நிலையில் இறுதி நாளான  நேற்று பெண்கள் வளர்த்த  முளைப்பாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு  அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |