ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் கார் மற்றும் லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கார் மற்றும் லோடு ஆட்டோவில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் குலையன்கரிசல் பகுதியில் வசிக்கும் ராயப்பன், முருகன் பலவேசமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கால்துறையினர் ராயப்பன், முருகன் பலவேசமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த ரூ.14 ஆயிரத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1170 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் லோடு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.