Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விதியை மீறி செயல்பட்ட கார்…. அதிகாரிகளின் அதிரடி…!!

போக்குவரத்து விதிகளுக்கு உட்படாமல் செயல்பட்ட காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் அரசு விதிகளை மீறி செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போக்குவரத்து அதிகாரிகள் விழுப்புரம் நகர பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே மக்களைத் தேடி மருத்துவம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிலையில் ஒரு கார் வந்துள்ளது. அந்த காரை அதிகாரிகள் மறித்து விசாரணை செய்துள்ளனர்.

அந்த விசாரணையில் அது அரசின் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் வாடகை கார் என்பது தெரியவந்துள்ளது. இந்த காரின் ஓட்டுனர் டிபோர்ட்  உரிமம் பெறவில்லை. மேலும்  வாடகைக்கு  காரை பயன்படுத்த வேண்டுமென்றால் இந்த உரிமம் வைத்திருக்க வேண்டும். இதனால் அதிகாரிகள் அந்த காரை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Categories

Tech |