பாலியல் வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கேகே சாலை அருகிலுள்ள லே-அவுட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு தண்ணீர் கேன் போடுவதற்கு வந்த வாலிபர் 41 வயதான பெண் தனியாக இருந்ததை பார்த்துள்ளார். எனவே அந்தப் பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விழுப்புரம் மாவட்டத்தைச் வி மருதூர் பகுதியில் வசிக்கும் செல்வபிரபு என்பவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்துள்ளது. இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட செல்வ பிரபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.