கார் ஓட்டுநரை மிரட்டி காரை கடத்தி சென்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியின் ரங்க பூரியை சேர்ந்த சச்சின்(29) ,மனோஜ்(27) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த விசாரணையில் வாடிக்கையாளர்களை போல் காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி கார் ஓட்டுனரை மிரட்டி காரை கடத்தி செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி கார் ஓட்டுனர் ஒருவர் அளித்த புகாரில் முனிர்காவிலிருந்து ரங்கபுரிக்கு 2 பேர் காரை வாடகைக்கு எடுத்ததாகவும் வழியில் தன்னை தாக்கி துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக அவர் கூறியிருந்தார். இவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவலர்கள் குற்றவாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி பொம்மை துப்பாக்கி என்பதை கண்டறிந்துள்ளனர்.