ஹைதராபாத் மாவட்டம் நாச்சரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. அந்த குடியிருப்பில் ஹேமாவதி (வயது 73) என்பவர் தனியாக வசித்து வருகிறார். அவரது ஒரே மகன் லண்டனில் இருக்கிறார். அவர் தன் தாயை உடனிருந்து கவனித்துக் கொள்ள பார்கவி (வயது 32) என்னும் பெண்ணை பணிக்கு அமர்த்தியுள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஹேமாவதி கண்ணில் லேசாக வலி இருப்பதாக கூறியிருக்கிறார். உடனே அதை சரிசெய்யும் சொட்டு மருந்து இருப்பதாக கூறி ஹார்பிக், சண்டுபாம் போன்றவற்றை தண்ணீரில் கலக்கி அந்தப் பெண் அவரது கண்ணில் ஊற்றியுள்ளார்.
இதனால் நான்கு நாட்களில் ஹேமாவதி என் கண்கள் சிவந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடனடியாக லண்டனில் இருக்கும் அவர் மகன் ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு ஹேமாவதியிடம் கூறியிருக்கிறார். இந்நிலையில் ஹேமாவின் வீட்டில் இருந்து 40 ஆயிரம் பணம், இரண்டு தங்க வளையல், செயின் உள்ளிட்ட சில நகைகளை திருடிக் கொண்டு உள்ளார். இந்நிலையில்ஹேமாவதிக்கு கண் பார்வை மெல்ல மெல்ல குறையத் தொடங்கி இறுதியில் முற்றிலுமாக கண்தெரியாத நிலைமைக்கு வந்து விட்டார்.
உடனடியாக அவரது மனைவி மகன் லண்டனில் இருந்து வந்து தாயை அழைத்துக் கொண்டு கண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதோ ஒவ்வாத ரசாயனங்கள் கண்ணில் விடப்பட்டு இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அந்த குடும்பத்தினருக்கு பார்கவி மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் செய்த விசாரணையில் பார்கவி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.