Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தனியார் நிறுவன ஊழியர்…. காட்டெருமையிடம் சிக்கியதால் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

காட்டெருமை தாக்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள செந்திட்டு பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கிருபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிருபாகரன் தனது தந்தை கோவிந்தனுடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது குப்பனூர்-சேலம் மலைப்பாதையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையின் குறுக்கே திடீரென வந்த காட்டெருமை மீது கோவிந்தனின் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதனையடுத்து மோதிய வேகத்தில் கோவிந்தன் மோட்டார் சைக்கிளுடன் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். ஆனால் கிருபாகரன் காட்டெருமையுடம் சிக்கி கொண்டார். இதனைத் தொடர்ந்து காட்டெருமை கிருபாகரனை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருபாகரனின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |