குடும்ப பிரச்சினையில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தங்குளம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான மகேந்திர குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடித்து விட்டு கும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மகேந்திரகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.