சமந்தாவின் ரகசியத்தை உடைத்த அவரின் ஜிம் டிரைனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமந்தா ஜிம்மில் தவறாமல் ஒர்க்கவுட் செய்பவர். இவர் அதிகாலையே எழுந்து ஒர்க்கவுட் செய்யத் தொடங்கிவிடுவார். இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் சமந்தாவின் டிரெய்னர் கூறியுள்ளதாவது, சமந்தா ஒரு குட்டி மான்ஸ்டர். இவர் தன் எடையை விட அதிகமாக எடை உள்ளதை தூக்க வேண்டும் என விரும்புவர். இவரை உற்சாகப்படுத்த தேவையே இல்லை.
அவரே நன்றாக ஒர்க் அவுட் செய்து விடுவார். சமந்தா 4:30 மணிக்கு ஒர்க்கவுட் செய்ய ஆரம்பித்துவிடுவார். இவர் டயட் விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார். அதிகமாக உணவு உண்பார். டயட் விஷயத்தில் அவர் ஏமாற்ற மாட்டார். இந்நிலையில் சமந்தாவின் ட்ரெயினர் சமந்தா அதிகமாக உணவு உண்பார் என்பதை வெளிப்படுத்தி விட்டார். இவர் கூறியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆனால் சமந்தா ஏற்கனவே அதிகம் சாப்பிடுவதற்காகதான் ஒர்க் அவுட் செய்கிறேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.