ரசிகர்களுக்கு நற்செய்தி ஒன்றை கூறியுள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டாரின் மகள் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கடந்த ஜனவரி மாதம் தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக அறிவித்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இதனால் இவர்களை சேர்த்து வைப்பதற்காக உறவினர்கள், நண்பர்கள் என முயற்சித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா முசாபீர் என்ற ஆல்பம் பாடலை தயாரித்து இயக்குகின்றார். இவர் அடிக்கடி முசாபீர் பாடல் குறித்த அப்டேட்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.
https://www.instagram.com/p/CapB19CDMHO/
இவர் தற்போது முசாபீர் பாடல் எப்போது வெளியாகும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலானது வரும் மார்ச் 8ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஏனென்றால் ஐஸ்வர்யாவின் பெயருக்குப் பின்னால் தனுஷ் பெயர் இல்லை. தனுஷ்-ஐஸ்வர்யா கூடிய விரைவில் சேர்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் ஐஸ்வர்யா வெளியிடும் எல்லா விஷயங்களிலும் ஐஸ்வர்யாவின் பெயர் பின்னால் தனுஷ் பெயர் இல்லை. ரசிகர்கள் அண்ணி உங்களின் பெயர் பின்னால் அண்ணா தனுஷின் பெயரை இணையுங்கள் என்று கூறுகின்றனர்.