Categories
Uncategorized

என்னப்பா இது… சொதப்பிய படக்குழு.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகிய நிலையில் இணையதள வாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படமானது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை கொண்டு உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் உருவாகி வருகின்றது. இப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. மேலும் ரகுமான் இசையமைக்கின்றார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் 3ல் வெளியானது. இப்போஸ்டரை இணையதள வாசிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த போஸ்டரில் குறிப்பாக விக்ரமின் புகைப்படமானது அவரது தலையை வெட்டி சரியாக ஒட்ட படாதது போல் உள்ளது. அது சரியாகவே ஒட்டப்படவில்லை என படக்குழுவை இணையதள வாசிகள் விமர்சித்து வருகின்றனர். போஸ்டரே இப்படி இருக்குதுனா படம் எப்படி இருக்கும்? என கேள்வி எழுகின்றது. இத்திரைப்படமானது செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |