முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள நாரணபுரம் பகுதியில் சங்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சங்கையா தனது கடைசி மகன் வீட்டில் தங்கியிருந்து தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வந்துள்ளார். இதற்கிடையே இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரது மனைவி தனது மூத்த மகனுடன் சென்று விட்டார். இந்நிலையில் மனவேதனையில் இருந்த சங்கையா வீட்டில் விறகுகளை அடுக்கி வைத்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு அதில் விழுந்துள்ளார். இதில் சங்கையா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கையாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.