ஆலையில் பற்றிய தீ விபத்தில் 3 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோட்டூர்-பொம்மையாபுரம் சாலையில் சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் இலைகளை கொளுத்தியுள்ளனர். அப்போது திடீரென பட்டாசு அலையில் தீ பற்றியது. அப்போது பணி செய்து கொண்டிருந்த குணவதி, பொன்னம்மாள், பேபி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.