Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அஜித்தின் வலிமை… யோகி பாபு நடித்துள்ளாரா…? வெளியான ஆதாரம்…!!!

அஜித்தின் வலிமை திரைப்படத்தில் யோகி பாபு இடம்பெற்றுள்ள புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படத்தை கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடினர். இத்திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் சில விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கின்றது.

வலிமை திரைப்படம் ரிலீஸாவதற்கு முன்பாக யோகிபாபு படத்தில் நானும் நடித்துள்ளதாக கூறியிருந்தார். ஆனால் சென்ற வாரம் ரிலீஸ் ஆகிய வலிமை திரைப்படத்தில் அவர் இடம்பெறவில்லை. இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதற்காக யோகிபாபு நடித்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது என கேள்வி எழுந்தது. கால்ஷீட் பிரச்சனை காரணமாகவே யோகிபாபுவின் காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் யோகி பாபு நடித்த புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. வலிமை திரைப்படத்தில் நாங்க வேற மாதிரி பாடலில் கூட்டத்தில் ஒருவராக யோகிபாபு நிற்கும் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Categories

Tech |