Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னால திரும்ப கொடுக்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கடன்தொல்லையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் துளசிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகாசியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளர். இந்நிலையில்  துளசிராமனுக்கு  கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டுள்ளனர் . இதனால் மன உளைச்சலில் இருந்த துளசிராமன்  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து துளசிராம் தம்பி ஜெயராம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துளசிராமனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |