Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரஜினியிடமே வேலையை காட்டிறீங்களா… தனுஷை மிரட்டும் ரஜினி ரசிகர்கள்…!!!

நடிகர் தனுஷை ரஜினிகாந்த் ரசிகர்கள் மிரட்டி வருவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். இவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்நிலையில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் ரஜினிக்கு இதில் சம்மதம் இல்லை. இருப்பினும் மகளின் விருப்பத்திற்காக ஒப்புக்கொண்டார். இவர்களுக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக இணையத்தில் அறிவித்தனர். இதனை அறிந்த நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர்.

ரஜினியின் கோபத்தால் ஐஸ்வர்யா, தனுஷ் உடன் சேர்ந்து வாழ்வதாக தனது முடிவை மாற்றிக் கொண்டார். இதன் காரணமாக தனுஷிடம் பேசினார் ஐஸ்வர்யா. ஆனால் தனுஷ் உன்னை போல் என்னால் உடனே முடிவை மாற்றிக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர்கள் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். லதா ரஜினிகாந்த் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிடோரை தொடர்புகொண்டு தனுஷுக்கு படவாய்ப்புகள் தரவேண்டாம் என கூறி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ரஜினியின் ரசிகர்கள் தனுஷை மிரட்டுவதாக கூறப்படுகின்றது. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை தன்மை வாய்ந்தது என தெரியாத நிலையில் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது.

 

Categories

Tech |