சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து சிலம்பம் போட்டி நடைபெற்றுள்ளது .
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் அமைந்துள்ள சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து நோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் நோபில் உலக சாதனை நிறுவன தலைமை மேலாளர் லட்சுமிநாராயணன், மாநில நடுவர் சுதர்சன், கல்லூரி ஆட்சிக் குழு தலைவர் அப்துல், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அபுபக்கர் சித்திக், அப்துல் சலீம், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் கல்லூரியை சேர்ந்த 40 மாணவிகள் சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர். அதன் பின்னர் அதிகாரிகள் சிலம்ப போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார்.