Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலைதடுமாறிய ஆட்டோ…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்தகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் எம்.கிருஷ்ணாபுரம் பகுதியில் கருப்பசாமி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் புத்தேந்தல் பகுதியில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்று விட்டு மீண்டும் ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கொடிக்குளம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆட்டோ நிலைதடுமாறியுள்ளது.

அப்போது டிரைவர் அருகே அமர்ந்திருந்த கருப்பசாமி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். இதனைபார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக கருப்பசாமியை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி கருப்பசாமி பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து உத்திரகோசமங்கை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |