உப்பு சீசன் தொடங்கியுள்ள நிலையில் உப்பள பாத்திகளில் உப்பு தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம், தேவிபட்டினம், கோரிமடம், திருப்பாலைக்குடி சம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உப்பு தயாரிக்கும் தொழில் பிரதானமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உப்பு உற்பத்தி சீசன் தொடங்கியுள்ள நிலையில் பனைக்குளம் நதிபாலம் பகுதியில் அமைக்கப்பட்ட உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி தயாரிப்பிற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக மழை பெய்த காரணத்தினால் உப்பள பாத்திகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளது. அதனை தொழிலாளிகள் வெளியேற்றி தற்போது உப்புக்காக பாச்சப்பட்ட தண்ணீரை கலக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆக அடுத்த மாதத்திற்குள் பாத்திகளில் உப்பு நன்றாக சேர தொடங்கிவிடும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.