Categories
அரசியல்

“ஸ்டாலினை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய கட்சியினர்…!!” கொந்தளிப்பில் கூட்டணி கட்சிகள்…!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை தழுவியது. கொங்கு மண்டலம் உட்பட அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கோவை மற்றும் சேலத்திலும் கூட திமுக வெற்றிக்கனியை பறித்தது. இந்த தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விபரத்தை அக்கட்சி அறிவித்திருந்தது. அதேபோல் திமுக சார்பில் தனித்துப் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களையும் அறிவித்து இருந்தது.

ஆனால் ஒரு சில இடங்களில் திமுக கூட்டணி கட்சியினர் போட்டியிடும் இடங்களில் திமுகவினர் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் ஸ்ரீ பெரம்பலூர் நகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அதிலேயும் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மேலும் பொ.மல்லபுரம் நகராட்சியில் திமுக கூட்டணி சார்பில் விசிகவுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதிலும் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவ்வாறு சில இடங்களில் திமுகவினர் கட்சி கட்டுப்பாட்டை மீறி கூட்டணிக் கட்சியினரை தோற்கடித்து திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றது ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சியினரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தோல்வியடைந்த கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

Categories

Tech |