Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு….!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திடீரென திருப்பதியில் ஆர்ஜித சேவை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக வெளியான செய்தியால் பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான தலைவர்
மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா
விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் திருமலையில் இயல்புநிலை திரும்பி சாதாரண பக்தர்களுக்கு சர்வ தரிசனம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை TTD உயர்த்தவில்லை.

சமீபத்தில் TTD போர்டு கூட்டத்தில் இந்த பிரச்சனை குறித்து வழக்கமான விவாதம் நடந்தது’ தேவஸ்தான தலைவரின் இந்த அறிவிப்பால் திருமலையில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் பக்தர்களுக்கு விரைவான சேவை வழங்க உள்ளதாகவும், விஐபி தரிசனத்தில் வரும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Categories

Tech |