Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கான ஆதார் கார்டில்…. விதிமுறைகள் தளர்வு… ஆதார் ஆணையம் அறிவிப்பு…!!!!

பாலியல் தொழிலாளர்களுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சான்றிதழ் இருந்தாலே ஆதார் கார்டு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்திடம் அரசு தெரிவித்துள்ளது.

பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் வழங்குவது தொடர்பாக 2013ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பிப்ரவரி 28ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் தொழிலாளர்களும் சரியான சான்றிதழ் இருந்தால் அவர்களுக்கும் ஆதார் கார்டு வழங்கப்படும் என ஆதரவு தெரிவித்திருந்தது. இதன்படி மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கிய சான்று இருந்தாலே பாலியல் தொழிலாளர்களுக்கு போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலாளர்களுக்கு கட்டுப்பாட்டு அமைப்பின்   சான்றிதழ் இருந்தாலே ஆதார் கார்டு வழங்கப்படும் என  உச்ச நீதிமன்றத்திடம் ஆதார மையம் தெரிவித்திருந்தது. பாலியல் தொழிலாளர்களின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் சான்று  இருந்தால் இருப்பிட சான்று போன்ற எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை என ஆதார் ஆணையம் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் பாலியல் தொழிலாளர்களுக்கும் ஒரே சான்றுகள் மூலம் ஆதார் கார்டு வழங்கப்படும் என ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

Categories

Tech |