மதுரையில் அரசு ஊழியர்கள் வாரம் ஒருநாள் அலுவலகத்திற்கு பேருந்து அல்லது நடந்து வர வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் புதன்கிழமை அன்று பேருந்து அல்லது நடந்து அலுவலகம் வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.