தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும் போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா மார்ச் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு அன்றைய நாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். மேலும் விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 26ஆம் தேதி அன்று பணி நாள் என்றும், வழக்கமாக சனிக்கிழமை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு மார்ச் 27-ஆம் தேதி பணி நாள் என்றும் தெரிவித்துள்ளார்.