பில்லி சூனியம் எடுப்பதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கரை பகுதியை சேர்ந்தவர் ரஜப் சேக். இவருக்கு இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது அந்த பெண் அவரிடம் தனக்கு வாழ்க்கை சிக்கலாகவும், நெருக்கடியாக உள்ளது என கூறியுள்ளார். இதற்கு ரஜப் உங்களுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது. இதை எடுத்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என கூறியுள்ளார். எனக்குத் தெரிந்த ஒரு சாமியார் இருக்கிறார் அவரிடம் செல்வோம் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த பெண் அவருடன் சகாபுதீன் சேக் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சகாபுதீன் சேக் மற்றும் ரஜப் சேக் ஆகிய இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜப் சேக் , சகாபுதீன் சேக் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.