Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள்”…. மனக்கசப்புகள் நீங்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாளாக இருக்கும். சகோதரர் வழி சச்சரவுகள் அகலும். வரவு திருப்திகரமாக இருக்கும். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். இன்று சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

பிள்ளைகளிடம் அன்பு பாசம் காட்டுவது நல்லது. பணத்தேவை பூர்த்தியாகும். உங்களுடைய செயல் திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள் மட்டும் கொஞ்சம் அலைச்சலை கொடுப்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் மிகுந்த ஆர்வம் காணப்படும். கல்வியில் வெற்றியும் ஏற்படும். மேற்கல்விக்காண முயற்சியில் வெற்றியும் இருக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாகவும் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |