Categories
தேசிய செய்திகள்

அடடே இங்கப் பாருங்களேன்..! உடுக்கை அடித்து உற்சாகமூட்டிய மோடி…. வைரலாகும் வீடியோ…!!!

உடுக்கை அடித்த பிரதமர் மோடியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளில் அதாவது வெற்றி பெற வேண்டியது அவசியம். இந்நிலையில்  மாநிலத்தில் ஏழாவது கட்ட தேர்தல் மார்ச்7  ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக  வாரணாசியில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது விஸ்வநாத் தாம்  கோயிலில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி கோயிலில் பூஜை வைக்கப்பட்டிருந்த உடுக்கையை பக்தர்கள் மற்றும் கட்சியினர் முன்பு உற்சாகமாக ஆடிக் காட்டினார். தற்போது பிரதமர் மோடியின் உடுக்கை அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://youtu.be/_W5pinPdqnQ

 

Categories

Tech |