தமிழகத்தில் கடந்த முறை சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, நாங்க ஆட்சி பொறுப்பேற்றால் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால் ஆட்சிக்கு பொறுப்பேற்று இதுவரையிலும் இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதன் காரணமாக ஆளுங்கட்சி மீது எதிர்கட்சி தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறது.
இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கும் திட்டம் தொடர்பாக இன்று (மார்ச் 5) முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் வரும் நிதியாண்டிற்கான நிதிநிலை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாகவும், மத்திய அரசிடமிருந்து தமிழக மின்வாரியத்திற்கு ரூ.13, 200 கோடி பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.