தமிழகத்தில் அதிக அளவில் பக்தர்கள் வரும் முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுகாதார வசதி, குடிநீர் வசதி, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும், மாற்று திறனாளிகளுக்கு இலவச திருமண திட்டம், பக்தர்களுக்கு கட்டணமில்லா மொட்டை அடிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் சிறப்பாக செய்து வருகிறது.
அதனை தொடர்ந்து தற்போது கோடைக்காலம் தொடங்க உள்ளதால் கோவில் பிரகாரங்களில் சூரிய வெப்பத்தை தவிர்க்கும் விதமாக பக்தர்கள் நடந்தும் செல்லும் இடங்களில் குளிர்ச்சி தரும் வகையில் தேங்காய் நார்களினால் பின்னப்பட்ட தரை விரிப்புகள் மற்றும் வெள்ளை நிற வண்ணம் பூசுதல் அமைத்து அவற்றில் அவ்வப்போது தண்ணீர் தெளித்து குளிர்விக்க அனைத்து கோவில் அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் அனைத்து பக்தர்களுக்கும் சுகாதாரமான குடிநீர், பக்தர்கள் அமர்ந்து இளைப்பாறுவதற்கு ஏற்ப இருக்கைகள் அமைக்கவும், கோவில்களின் ஆகம விதிகளுக்கு உட்பட்டு தற்காலிக நிழற்பந்தல் அமைக்கவும் அவற்றில் மின் விசிறிகள் பொருத்தவும், எலுமிச்சை பானம் மற்றும் மோர் ஆகியவை வழங்கவும் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.