Categories
உலக செய்திகள்

“எங்களை நீங்கள் போட்டியாக நினைக்க வேண்டாம்”…. அமெரிக்காவுக்கு பிரபல நாடு வலியுறுத்தல்….!!

அமெரிக்கா சீனாவின் வளர்ச்சியை போட்டியாக கருத வேண்டாம் என்று சீன பத்திரிக்கையாளர் ஜான் யேசுய் கூறியுள்ளார். 

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களால் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா சீனாவின் வளர்ச்சியை போட்டியாக கருத வேண்டாம் என்று சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக சீன நாடாளுமன்றத்தின் பத்திரிக்கையாளர் ஜான் யேசுய் கூறியதாவது. “சீனாவின் வளர்ச்சியை ஒரு சாக்காக பயன்படுத்தியும், போட்டியாளராக நினைத்துக் கொண்டு இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையையும், ஒத்துழைப்பையும் சிதைப்பது அமெரிக்காவின் சொந்த நலன்களை பாதிக்கும். இதனை தொடர்ந்து சீனா மற்றும் அமெரிக்காவின் நிலையான உறவுகள் இரு தரப்பினரின் வளர்ச்சிக்கும் நல்லது. மேலும் காலநிலை மாற்றம் கொரோனா தொற்று மற்றும் பிற உலகளாவிய சவால்களை திறம்பட பாதுகாப்பதற்கும் சர்வதேச அமைதியை பேணுவதே சரியானது. இந்த நிலையில் சீனா பிரச்சினையைத் துண்டை நினைக்கவில்லை. ஆனால் பிரச்சினை வந்தாலும் பயந்து போகாது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |