Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற சிறுவர்கள்…. தண்ணீரில் மூழ்கியதால் சோகம்…. கதறும் பெற்றோர்….!!

அனகாபுத்தூர் கல்குவாரி குட்டையில் தண்ணீரில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை,  பல்லாவரம் அருகில் பொழிச்சலூர் பத்மநாதன் சம்பந்தனார் தெருவில் வசித்து வரும் முனியேந்திரன் மகன் முனி லோகேஷ்(17), மற்றும் அதே பகுதியை சேர்ந்த பொழிச்சலூர் பிள்ளையார் கோவில் இரண்டாவது குறுக்கு தெருவில் வசித்து வரும் மோகன்ராஜ் மகன் யுகேஷ்(17). இவர்கள் இருவரும் நண்பர்கள். முனி லோகேஷ் பெத்தேரி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். யுகேஷ் அனகாபுத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

நேற்று மாலை அனகாபுத்தூர் காமராஜ புரத்தில் உள்ள கல் குட்டையில் முனி லோகேஷ், யுகேஷ் உட்பட 6 பேர் குளிக்க சென்றுள்ளார்கள்.இந்நிலையில்  குளித்துக் கொண்டிருக்கும் போது யுகேஷ் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முனி லோகேஷ் சிநேகிதனை காப்பாற்ற கல் குட்டையில் குதித்துள்ளார். பின்னர் முனி லோகேஷ் யுகேஷ் இருவருமே தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இத்தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி முனி லோகேஷ் யுகேஷ் இருவரையும் பிணமாக மீட்டு பிரேத பரிசோதனைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சங்கர்நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |