வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் இன்று (மார்ச்.5) திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல தடை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.