துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள் ஆக இருக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியம் ஒன்று இனிதே முடிவடையும். இன்று தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவுக்கு வரும்.
செல்வம் உரிமை அதிகாரம் பதவி போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்பு இருக்கும். ஆகையால் இந்த விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையாக செயல்படுங்கள். மாணவ செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். மேற்கல்விக்கான முயற்சி உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே இருக்கும் ஆசிரியரிடம் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்டு தைரியமாக தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பழுப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு மற்றும் இளம் நீல நிறம்