Categories
மாநில செய்திகள் வானிலை

சென்னையிலிருந்து 390 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தம்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழக கடல் பகுதியை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கையை நோக்கி நகரும் நிலையில் இருப்பதாகவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் சென்னையிலிருந்து 390 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 13 கிலோ மீட்டர் வேகத்தில் மண்டலம் நகர்ந்து வரும் நிலையில் நாகை அருகே 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |