சேலம் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் . இவர் நாமக்கல் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு தலை வேறு, உடல் வேறு என கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை வழக்கில், யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வருகிற 8-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோகுல்ராஜின் தாயார் கூறியுள்ளதாவது, என் மகனை கொடூரமாக கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு வெளியே கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.