Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்…. “4 நகராட்சியையும் கைப்பற்றிய திமுக”… யார் யார் தெரியுமா?

ஈரோடு மாவட்டத்தில் 4 நகராட்சிகளையும்  தி.மு.க.வே கைப்பற்றி அசத்தியுள்ளது.

தமிழகத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் களை தேர்ந்தெடுக்கும் விதமாக மறைமுக தேர்தல் எல்லா நகராட்சி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானி ஆகிய நான்கு நகராட்சிகளிலும் மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த நான்கு நகராட்சியிலும் தி.மு.கவே  வெற்றி பெற்றுள்ளது

அதன் தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் பற்றிய விபரங்கள்: கோபி நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த என்.ஆர்.நாகராஜ் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். துணைத் தலைவராக காங்கிரஸை சேர்ந்த தீபா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சத்தியமங்கலம் நகராட்சியில் திமுகவை சேர்ந்த ஆர். ஜானகிராமசாமி  என்பவர் வெற்றி பெற்றுள்ளார். துணைத்தலைவராக திமுகவை சேர்ந்த நடராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த டி. ஜனார்த்தனன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். துணைத்தலைவராக திமுகவை சேர்ந்த பி.ஏ. சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பவானி நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சிந்தூரி இளங்கோவன் என்பவர் வெற்றிபெற்றுள்ளார். துணை தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மணி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |