வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் இன்று (மார்ச்.5) திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இதையடுத்து மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மார்ச் 9ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.