மாலியில் நேற்று ராணுவ படதளத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆப்பிரிக்காவின் மாலியா நாட்டில் அல்கொய்தா ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் அதிகம் செலுத்தி வருகிறது. மேலும் அந்நாட்டு மக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு ராணுவத்தினர் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுத்து வருகின்றனர். இதனால் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலியா நாட்டின் ராணுவ படதளத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் வெடி குண்டுகள் மற்றும் ராணுவ தளத்தை சுற்றி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
இந்த தாக்குதலை அரிந்த ராணுவத்தினர் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இரு தரப்பினர் இடையிலானா இந்த மோதலில் ராணுவ வீரர்கள் 27 பேர் உயிரிழந்துள்ளனர், 33 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 7 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ராணுவத்தினரால் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த தாக்குதலை ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்கி இருக்கலாம் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மாலி பிரான்சின் காலனி நாடாகும். இதற்கிடையில் மாலியில் 2013ம் ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டின் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைகளை தடுத்து வருகின்றனர். இருப்பினும் பிரான்ஸ் கடந்த மாதம் மாலியில் இருந்த தனது படைகளை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.