ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே (வயது 52) மாரடைப்பால் காலமானார். இவர் தாய்லாந்தில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே 90-களில் உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வார்னேவின் மரணம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். மேலும் வார்னே நம் தேசத்தின் மிகச்சிறந்த மனிதர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். ஷேன் வார்னே மறைவு உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.